வெற்றிமாறனின் 'விடுதலை' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

வெற்றிமாறனின் \'விடுதலை\' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

'அசுரன்' படத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகி வரும் 'விடுதலை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
 
முன்னணி காமெடி நடிகரான சூரி, கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'விடுதலை'. இப்படத்தில் நடிகர் சூரியுடன், 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, 'க/பெ ரணசிங்கம்' பட புகழ் நடிகை பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
 
ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு சத்தியமங்கலம் அடர்ந்த வனப்பகுதியில் படமாக்கப்பட்டிருக்கிறது. 'அசுரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாக்கியிருக்கும் திரில்லர் படமான 'விடுதலை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
 
சூரி போலீஸாக நடித்திருப்பதாலும், இயக்குனர் வெற்றிமாறன் புதிய தொழில்நுட்பத்தில் இயக்கி இருப்பதாலும் 'விடுதலை' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இதே பெயரில் தமிழ் திரை உலகில் 1986 ஆம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடித்த திரைப்படமொன்று வெளியாகி இருந்தாலும், ட்ரெண்டிங் இயக்குனரான வெற்றிமாறனின் கைவண்ணத்தில் உருவாகுவதால், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு இணையத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரவேற்பு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top