மொத்தமாக வலிமை திரைப்படம் இத்தனை கோடி வசூல் தான்! போனி கபூர் ட்வீட்!
Posted on 24/03/2022

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட வலிமை திரைப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
மேலும் வலிமை திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து பதிவிட்டுள்ளார்.
அதன்படி வலிமை திரைப்படம் ZEE 5 -ல் வரும் 25 ஆம் தேதி வெளியாக இருக்கிறது, இதனால் தற்போது அதன் பிரத்யேக ட்ரைலரை வெளியிட்டுள்ளார் போனி கபூர்.
மேலும் வலிமை திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் 200+ கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Tags: News