2016-ம் ஆண்டின் டாப் 5 ஹீரோயின்கள்

2016-ம் ஆண்டின் டாப் 5 ஹீரோயின்கள்

2016-ம் ஆண்டின் கனவு கன்னி யார்? என்ற கேள்விக்கு டாப் 5 ஹீரோயின்களுக்கான பதில் கிடைத்துள்ளது. 2016-ம் ஆண்டு, தமிழ் சினிமாவில் பல புது முகங்கள் வந்து சென்றாலும், ரசிகர்களின் கனவை  ஆக்கிரமிக்கும் ஒரு நபரே, இந்த ஆண்டின் கனவுக்கன்னி. அந்த வகையில் இந்த ஆண்டின் கனவுக்கன்னியாக ரசிகர்களின் கனவை கொள்ளை கொண்ட 5 டாப் ஹீரோயின்கள் லிஸ்ட்...

நயன்தாரா

தனக்கென தனி மார்க்கெட் லெவலையே உருவாக்கி, அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும், டாப் லிஸ்ட் -ல் இடம்பிடித்திருப்பது சிறப்பு. தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரஜினி முதல் விஜய் சேதுபதி வரை அனைவருக்கும் பொருத்தமான ஜோடியாக நடிப்பது அழகு. சரியான படங்களை தேர்ந்தெடுத்து எந்த வயது நடிகருக்கும் ஜோடி சேர்ந்து பொருந்துவது நயனை இன்னும் டாப்பிலேயே வைக்கிறது.

காதல் கிசுகிசுவில் சிக்காமலிருப்பது வெள்ளித்திரையில் தொடர்ந்து நிலைத்து இருக்க உதவியாக இருக்கும்.

கீர்த்தி சுரேஷ்

ஒவ்வொரு வருடமும் திடீரென ஒரு புதுமுகம் அறிமுகமாகி டாப் லிஸ்டில் இடம்பிடிப்பர். அந்த வகையில் இந்த வருடம் கீர்த்தி சுரேஷ் இடம் பெற்றுள்ளார். இது என்ன மாயம் படம் சரியான மார்க்கெட்டை தராவிட்டாலும், சிவகார்த்திகேயனுடன் நடித்த ரஜினி முருகன் பலத்த வெற்றியை தந்ததோடு, விஜயுடன் சேர்ந்து நடிக்க ஒரு பட வாய்ப்பை பெற்றுத்தந்தது. தொடரி படத்தின் மூலம் சிறு சரிவிற்கும் சென்றாலும், சூர்யா, விஜய் சேதுபதி போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இளமை, சிரித்த முகம் ஆகியவை பலமாக இருந்தாலும், இன்னும் நடிப்பதற்கு ஸ்கோப் உள்ள படத்தை தேர்ந்தெடுத்தால் மேலும் சிறப்பு.

 சமந்தா

பானா காத்தாடி மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி, ரசிகர்கள் மனதை ஆட வைத்தவர் சமந்தா.நாக சைதன்யாவுடன் திருமணம் முடிவாகி இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், இவரை தேடி தயாரிப்பாளர்களின் கூட்டம் சென்று கொண்டு தான் இருக்கிறது. வெண்ணெய்யில் செய்த சிலை போல மேனி, குறும்பு சிரிப்பு அழகாக அமைந்தாலும், நடிக்கணுமா வேண்டாமா என்ற குழப்பத்திலேயே நிற்கிறார்.

அடுத்த வருடம் பாதிக்கு மேல் தான் திருமணம், அதற்குள் சட்டென ஒரு முடிவெடுத்தால் நல்லது.

தமன்னா

சில வருடங்களுக்கு முன் கனவுக்கன்னியாக வலம் வந்த இந்த வெள்ளை தேவதை சில சறுக்கல்களில் சிக்கினார். பின், பாகுபலி மூலம் தேவதையா மீண்டும் ரீ-என்ட்ரி ஆனவர், தர்மதுரை படத்தில் தன் நடிப்பின் மூலம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டு, மீண்டும் டாப்பில் வந்துவிட்டார்.

பந்தாவ கொஞ்சம் கொறைச்சுட்டு நடிப்பில கவனம் செலுத்துனா, அடுத்த வருடமும் டாப்லையே இருக்கலாம்.

காஜல் அகர்வால்

தமிழுக்கு முழுக்கு போட்டுவிட்டு, தெலுங்கு ஹிந்தி என்று சுற்றப்போனவர், போன வேகத்திலேயே, தமிழுக்கு வந்துவிட்டார். தற்போது அஜித்திற்கு ஜோடியாக களமிறங்க இருக்கிறார். அழகான குறும்புத்தனத்துடன், மீண்டும் சுற்றப்போகாமால், ஒரே இடத்தில் நிலையாக இருந்தால் சிறப்பு.

இவர்களைத் தொடர்ந்து ஸ்ரீதிவ்யா, எமி ஜாக்சன், ஸ்ருதி ஹாசன், நிக்கி கல்ராணி, ஹன்சிகா, கேத்ரின் தெரசா போன்று இந்த வரிசை நீள்கிறது, இதில், ஒரே படத்தில் இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்ட மஞ்சிமாவும் இடம்பிடித்துள்ளார்.

Tags: News, Hero, Lifestyle, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top