முருகதாஸின் அடுத்த படம் இதுதான்!
Posted on 30/07/2022

இயக்குனர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். பல பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்த அவர் கடந்த இரண்டு வருடங்களாக புது படம் அறிவிக்காமல் இருக்கிறார்.
2020ல் ரஜினியின் தர்பார் படத்திற்க்கு பிறகு முருகதாஸ் விஜய் உடன் கூட்டணி சேர்வதாக இருந்துது. ஆனால் சில காரணங்களால் அந்த படம் ட்ராப் ஆனது.
அதற்கு பின் முருகதாஸ் புது படம் எதுவும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில் முருகதாஸ் அடுத்து சிம்புவுடன் கூட்டணி சேர்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் பற்றிய கதை என்றும், அதில் சிம்பு தொழிலதிபராக நடிக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது.
இந்த தகவல் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Tags: News