பாகுபலியுடன் டூயட் பாட விரும்பும் பிரபல இயக்குனரின் செல்லம்!
Posted on 16/05/2017

தனக்கு பிடித்த தென்னிந்திய ஹீரோ பிரபாஸ் என்றும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுவதாகவும் பாலிவுட் நடிகை ஆலியா பட் தெரிவித்துள்ளார். பாகுபலி 2 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் பிரபாஸுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நடிகைகள் ஆசைப்படுகிறார்கள். பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் சுஜீத் இயக்கத்தில் சாஹோ தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க கத்ரீனா கைஃப், பரினீத்தி சோப்ரா, ஷ்ரத்தா கபூர் ஆகியோ பாலிவுட் நடிகைகளிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டார்களாம். இந்நிலையில் பாலிவுட்டின் இளம் நடிகைகளில் ஒருவரான ஆலியா பட் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு பிடித்த தென்னிந்திய ஹீரோ பிரபாஸ் என்றும் ஆலியா தெரிவித்துள்ளார்.
பாகுபலி 2 படத்தை பார்த்தேன் மிகவும் பிடித்துள்ளது என்றும் கூறியுள்ளார் ஆலியா. பாகுபலி 2 படத்தை இந்தியில் வெளியிட்ட பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் மூலம் நடிகையானவர் ஆலியா பட்.
Tags: News, Hero, Star