ஜெயிலர்-ல் கேமியோ கதாபாத்திரத்தில் முக்கிய நடிகர்!
Posted on 02/08/2022

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் தொடங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் சமீபத்தில் இப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் நடந்ததாகவும் தகவல் பரவின.
இந்நிலையில் இயக்குநர் நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் நல்ல நண்பர்களாக திகழ்ந்து வருகின்றனர். அவர்கள் கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்தது.
மேலும் இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நெல்சன் முடிவேடுத்து இருப்பதாகவும், ஆனால் அதற்கு ரஜினி வேண்டாம் என சொன்னதாகவும் மூத்த பத்திரிக்கையாளர்கள தெரிவித்துள்ளனர்.
இது எந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, சிவகார்த்திகேயன் இதற்கு முன் நெல்சன் திரைப்படமான பீஸ்ட்-ல் அரபிக் பாடலை எழுத்திருந்தார். அது உலகளவில் வைரல் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
Tags: News, Hero