ஜிஎஸ்டி பயம்... இன்றைக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

ஜிஎஸ்டி பயம்... இன்றைக்கு எத்தனை படங்கள் ரிலீஸ் தெரியுமா?

இன்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 7 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன. ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் எனும் ஹாலிவுட் படமும் இவற்றுடன் களமிறங்குகிறது. நாளை முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பால் டிக்கெட் கட்டணங்கள் உயர்வு, வரிவிலக்கு ரத்து போன்றவை அமலுக்கு வருவதால் இத்தனைப் படங்கள் இன்று வெளியாகின்றன. இன்றைய படங்கள் ஒரு பார்வை...

ஆர் கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இவன் தந்திரன். கண்ணனுடன் இணைந்து ராம்பிரசாத் என்பவர் படத்தைத் தயாரித்துள்ளார். படம் குறித்து பாசிடிவான செய்திகள் பரவுவதால் இந்தப் படத்துக்கு ஓரளவு அதிக அரங்குகள் கிடைத்துள்ளன.

பெப்பி சினிமாஸ் தயாரித்துள்ள யானும் தீயவன் படத்தை பிரஷாந்த் ஜி சேகர் இயக்கியுள்ளார். ராஜு சுந்தரம் வில்லனாக நடித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகம் அஸ்வின் ஜெரோம் நாயகனாக அறிமுகமாகிறார். வர்ஷா நாயகியாக நடித்துள்ளார்.

தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் படம் அதாகப்பட்டது மகாஜனங்களே. ரேஷ்மா ரத்தோர் நாயகி. இன்பசேகரன் இயக்கியுள்ளார்.

சந்தோஷ், நயனா நடித்துள்ள எவனவன் படத்தை நட்டி குமார் இயக்கியுள்ளார். சோனியா அகர்வாலும் நடித்துள்ளார். தயாரிப்பு - தங்கமுத்து, பி.கே.சுந்தர், கருணா, நட்ராஜ்.

வெப்படை ஜி.செல்வராஜின் தமிழ்க்கொடி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்கியுள்ள ‘காதல் காலம்'. இதில் சந்துரு கதாநாயகனாகவும் நித்யா ஷெட்டி, சார்விசெக்குரி இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.

லியா பிலிம் கம்பெனி பட நிறுவனம் தயாரிப்பில், ஒரு பேயின் காதல் கதையை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘எங்கேயும் நான் இருப்பேன்.' இந்தப் படத்தில் பிரஜின், சுரேஷ் இருவரும் ஹீரோவாக நடிக்கிறார்கள். நாயகியாக கலா கல்யாணி நடிக்கிறார்.

ஆபிஸ் சீரியலில் நடித்த விஷ்ணு, ‘இவன் யாரென்று தெரிகிறதா' படம் மூலம் ஹீரோவாகி இருக்கிறார். சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய சுரேஷ்குமார் இயக்குகிறார். சதுரம் பட நாயகி வர்ஷாவும், சதுரங்க வேட்டை படத்தில் நடித்த இஷாரா நாயரும் நாயகிகளாக நடிக்கின்றனர்.

மேலே கண்ட 7 தமிழ்ப் படங்களையும் விட அதிக அரங்கில் வெளியாகும் படம் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ். மைக்கேல் பே இயக்கியுள்ளார்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top