நடிகை 'மைனா' நந்தினியின் கணவர் விஷம் குடித்து தற்கொலை!
Posted on 04/04/2017

சரவணன் மீனாட்சி டிவி தொடர் புகழ் நந்தினியின் கணவர் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சரவணன் மீனாட்சி டிவி தொடரில் மைனா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நந்தினி. மைனா மறக்க முடியாத மைனாவாக நடிப்பில் அசத்தியவர். டிவி தொடர் தவிர்த்து டிவி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார்.
நந்தினிக்கும், சென்னையில் ஜிம் வைத்துள்ள ஜிம் மாஸ்டர் கார்த்திக்கிற்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5ம் தேதி மதுரையில் திருமணம் நடைபெற்றது. கார்த்திக், நந்தினி சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தனர். திருமணமாகி ஒரு ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் கார்த்திக் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்து கார்த்திக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
போலீஸார் கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags: News, Hero, Lifestyle, Star