தமன்னாவின் 'ராணி'யை தட்டி பறித்த காஜல்

தமன்னாவின் \'ராணி\'யை தட்டி பறித்த காஜல்

'பாகுபலி' படத்தின் வெற்றிக்கு பின்னர் தமன்னாவுக்கு வாய்ப்புகள் குவிந்தது மட்டுமின்றி சம்பளமும் பெருமளவும் உயர்ந்தது. அந்த விறுவிறுப்புடன் தமன்னா ஒப்புக்கொண்ட படம் தான் 'குயீன்' ரீமேக். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளிலும் ராணியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் தற்போது 4 படங்களிலும் இருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டுள்ளார்.

தமன்னாவின் ராணி வேடத்தை கைப்பற்றியவர் தல, தளபதியுடன் நடித்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், மற்றும் கன்னட படங்களின் ரீமேக்கில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை 'உத்தமவில்லன்' பட இயக்குனர் ரமேஷ் அரவிந்த் இயக்கவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்த நிலையில் 'குயீன்' படத்தில் வரும் இன்னொரு முக்கிய கேரக்டரும், நாயகியின் தோழியுமான கேரக்டரில் நடிக்க எமிஜாக்சன் ஒப்பந்தமாகியுள்ளார். ஒரே படத்தில் காஜல் அகர்வால், எமிஜாக்சன் என பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்ப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முதல் தொடங்கவுள்ளதாம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top