மீண்டும் விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா - இயக்குநர் யார் தெரியுமா?

மீண்டும் விஞ்ஞானியாக நடிக்கும் சூர்யா - இயக்குநர் யார் தெரியுமா?

சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் ஒரு படம், TJ ஞானவேலுடன் ஒரு படம், வெற்றிமாறனின் வாடிவாசல் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் சூர்யா.

ஆனால், இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகவுள்ள, வாடிவாசல் திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு தள்ளிப்போய் உள்ளது. இதனால், வெற்றிமாறனை தவிர்த்து தங்கைவசம் இருக்கும் மற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா நடிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில், ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா புதிய படம் நடிக்கப்போவதாக தெரியவந்துள்ளது. இப்படத்தில் மீண்டும் நடிகர் சூர்யா விஞ்ஞானியாக நடிக்கவிருக்கிறாராம்.
 
அயலான் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்தபின், ரவிக்குமார் இப்படத்தை இயக்குவார் என்றும், அதற்க்கான ப்ரீ-ப்ரோடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுமட்டுமின்றி இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கவிருக்கும், கதாநாயகியாக யார் என்றும் இன்னும் முடிவு செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top