விஜய்யுடன் இணையும் சூப்பர் ஸ்டார்!
Posted on 08/06/2022

தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. வம்சி இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்கிறார்.
மேலும், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த், யோகி பாபு என பல முன்னணி நட்சத்திரங்கள் தளபதி 66ல் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தின் First லுக் வருகிற ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தளபதி 66 படத்தில் ஒரு சிறிய காமியோ ரோலில் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், நடிகர் மகேஷ் பாபு நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இது உண்மையான தகவலா?
Tags: News