சுந்தர் சி யின் 'அரண்மனை 3' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சுந்தர் சி யின் \'அரண்மனை 3\' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சி-யின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதனை நடிகர் ஆர்யாவும், நடிகை ராசிகண்ணா தங்களது இணைய பக்கத்தில் வெளியிட்டனர்.

பேய், ஆவி போன்ற விடயங்களை மையமாகக் கொண்டு தமிழ் திரையுலகில் திரைப்படங்கள் வெளியாவதும், அதற்கு ரசிகர்கள் பாரிய அளவில் ஆதரவளிப்பதும் தெரிந்த விடயம். 'காஞ்சனா' மற்றும் 'அரண்மனை' ஆகிய படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்றதே இதற்கு சாட்சி. இந்நிலையில் இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் 'அரண்மனை 3'. இந்தப்படத்தில் ஆர்யா, சுந்தர்.சி, மறைந்த காமெடி நடிகர் விவேக், மனோபாலா, யோகி பாபு, சம்பத், வின்சென்ட் அசோகன், நடிகைகள் ஆண்ட்ரியா, ராசிகண்ணா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யு. கே. செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சி.சத்யா இசை அமைத்திருக்கிறார்.
 
ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான அரண்மனை ஒன்றின் பின்னணியில் அமானுஷ்ய சக்திகள் மற்றும் ஆவி தொடர்பான விடயங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும். இந்த திகில் படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அரண்மனை படத்தின் முதல் பாகத்தில் ஹன்சிகா மொத்வானி பேயாக நடித்திருந்தார். அரண்மனை படத்தின் இரண்டாவது பாகத்தில் த்ரிஷா பேயாக நடித்திருந்தார். அரண்மனை படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிகர் ஆர்யா பேயாக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 'அரண்மனை 3' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் மறைந்த காமெடி நடிகர் விவேக் இடம்பெற்றிருப்பதால் இது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top