எனக்கு நானே குழந்தை - கோவைசரளா!

எனக்கு நானே குழந்தை - கோவைசரளா!

உங்களுக்கு குழந்தை இருக்கிறதா?
கோவைசரளா: எனக்கு நானே குழந்தை.
சரண்யா பொன்வண்ணன்: இராமசந்திராவில் இரண்டுபேருமே மருத்துவம் பெரியவள் மூன்றாம் ஆண்டும் சிறியவள் முதலாம் ஆண்டும் படிக்கிறார்கள்.

கமல் சார் கட்சி ஆரமித்தால் அவர் கதாநாயகிகள் எல்லாம் அவர் கட்சியில் சேர்வார்களா?
கோவைசரளா: அது எனக்கு தெரியவில்லை இன்று என்ன நடக்கும் என்பதே தெரியவில்லை அப்படி இருக்கையில் நாளை என்ன என்பது மட்டும் எப்படி தெரியும்.

இட்லி படத்தை பற்றி ஏதாவது சொல்லுங்க?
சரண்யா பொன்வண்ணன்: ஒரு படத்தை கதாநாயகனை நம்பி எடுப்பார்கள், இயக்குநரை நம்பி எடுப்பார்கள் ஆனால் இயக்குநர் கதையை மட்டுமே நம்பி எடுப்பது தான் சாமர்த்தியம்.அப்படி தற்போது வந்தபடம் மகளிர்மட்டும் அதில் கதைக்கு யார் தேவையோ அவர்களை மட்டும் வைத்தார்கள் அதுபோலத்தான் இந்த இட்லி படமும் கதைக்கு தேவை என்பதால் எங்களை சேர்த்தார்.இந்த மாதிரி கதைகளை நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

நீங்கள் மூன்றுபேரும் இப்படத்தில் தோழிகளா இல்லை யதார்த்தமாக சந்திப்பீர்களா?
சரண்யா பொன்வண்ணன்: ஆரம்பம் முதலில் இருந்தே தோழிகளாக வருவோம்.

ஏதோ தனியா வேஷம்லாம் போட்டிருக்கிங்களாமே?
கோவை சரளா: ரொம்ப பெருசாலாம் இல்ல ஓரளவுக்கு போட்டிருப்பேன்.
சரண்யா பொன்வண்ணன்: என்ன பொறுத்தவரை அது பெருசுதான் பேன்ட் சர்ட், ஜீன்ஸ்லாம் நான் போட்டதே இல்ல.முதலில் விருப்பம் இல்லை வீட்டில் உள்ளவர்களிடம் கருத்து கேட்டேன் அவர்கள் கதைக்கு தேவைபட்டால் அதை பண்ணலாம் என்று சொன்னார்கள்.இயக்குநர் அளித்த நம்பிக்கையில் நடித்தேன்.

நீங்க மட்டுமா இல்லை அனைவருக்கும் அதே உடையா?
சரண்யா பொன்வண்ணன்: எல்லோருக்கும் அதே உடை அதுதான் ஆறுதலாக இருந்தது.
கோவைசரளா: ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். எங்களுக்கு ஒரு லவ் ட்ராக் இருக்கு அது மிக வித்தியாசமான ஒன்று அதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

மூர்த்தி சார் பற்றி சொல்லுங்க:
கோவை சரளா: அவர் பெரிய லஜன்ட் அப்போ என்ன வம்பு பண்ணுவாறோ அது இப்பவரை இருக்குது.
சரண்யா பொன்வண்ணன் : இதில் ரொம்ப நடிகர்கள் இருக்கிறார்கள் அதான் இதன் ப்ளஸ். எல்லாரும் அவங்க பங்க சிறப்பா பண்ணியிருக்காங்க..

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top