‘சிங்கப்பெண்ணே’ - ஜீ5 வழங்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு கிளப் ஷோ

‘சிங்கப்பெண்ணே’ - ஜீ5 வழங்கும் புதிய குடும்ப பொழுதுபோக்கு கிளப் ஷோ

ஜீ5 தனது தமிழ் பார்வையாளர்களுக்காக ‘சிங்கப்பெண்ணே’ என்ற புதிய கிளப் ஷோ பற்றிய அறிவிப்பை மகிழ்ச்சியுடனுடம் பெருமையுடனும் வெளியிடுகிறது.

‘சிங்கப்பெண்ணே’ மராத்தியில் வெற்றி பெற்ற 'லகிரா ஜாலா ஜி' என்ற தொடரின் ரீமேக் ஆகும். இது காதல், குடும்பம், டிராமா, ஆக்ஷன் ஆகியவற்றையை கலவையாக கொண்ட ஒரு தொடர். இது எல்லை பாதுகாப்பு படையில் சேர்வதற்கான தனது குறிக்கோளை அடைய பல்வேறு தடைகளை தாண்டும் ஒரு பெண்ணை பற்றிய கதை. அவள் ஏன் எல்லை பாதுகாப்பு படையில் சேர விரும்புகிறாள்? அவள் எதை சாதிக்க விரும்புகிறாள்? ஆகியவையே ‘சிங்கப்பெண்ணே’ கிளப் ஷோவின் சுவாரஸ்யமான கதைக்களம்.
 
அர்னாவ் மற்றும் பாயல் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்தொடரில் நடிகர் உதயா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
பிரபல நடிகை குட்டி பத்மினி இந்த தொடரை தயாரித்து நடிக்கவும் செய்துள்ளார்.
 
வின்சென்ட் அசோகன், பிளாக் பாண்டி, முக்தார் கான், வெங்கட், ரவி காந்த், ஸ்ரீ லக்ஷ்மி, லாவண்யா, கிரிஷ், சுபத்ரா, சரத் இன்னும் பல பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர்.
 
R. பவன் இந்த ‘சிங்கப்பெண்ணே’ கிளப் ஷோவை இயக்கியுள்ளார்.
 
வசனம் - விவேக் ஷங்கர்
இரண்டாவது யூனிட் இயக்குநர் - சிவ கணேஷ்
திரைக்கதை - கீர்த்தனா
ஒளிப்பதிவு- ஸ்ரீகாந்த் & ஆனந்தராஜ்
இசை - எல்.வி.முத்து கணேஷ்
எடிட்டிங் - வில்ஸி
கூடுதல் திரைக்கதை - கோபி
 
ஜீ5 கிளப் சலுகையின் ஒரு பகுதியாக சிங்கப் பெண்ணே தொடர் வரும் டிசம்பர் 22 அன்று வெளியாகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top