ஷங்கரின் RC15 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

ஷங்கரின் RC15 ஷூட்டிங் திடீர் நிறுத்தம்!

ஷங்கர் தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் RC15 படத்தை இயக்கி வருகிறார்.

170 கோடி ருபாய் பட்ஜெட்டில் இந்த RC15 படம் உருவாகி வருகிறது. ராம் சரண் இதில் இரண்டு ரோல்களில் நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இருப்பினும் அது பற்றி உறுதியான தகவல் எதுவும் வரவில்லை.
 
இந்நிலையில் ஹைதராபாத்தில் Victoria Memorial Home and Residential Schoolல் ஷூட்டிங் நடைபெற்று வந்திருக்கிறது.
 
RC15 ஷூட்டிங் நடந்த பள்ளிக்கு கூட்டமாக வந்த பாஜகவை சேர்ந்த Akula Srivan என்பவர் அங்கு நடக்கும் ஷூட்டிங்கை தடுத்து நிறுத்தி இருக்கிறார்.
 
பள்ளியில் வகுப்பு நடக்கும் நேரத்திலேயே ஷூட்டிங் நடத்துவதால் மாணவர்கள் படிப்பு பாதிக்கிறது என அவர் குற்றம்சாட்டினார். ஷூட்டிங் நடத்த அனுமதி கொடுத்த பள்ளி கல்வி துறை அமைச்சரை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.
 
இதனால் RC15 படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. 

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top