சசிகுமாரின் கொடிவீரன் படப்பிடிப்பு தொடங்கியது!
Posted on 10/05/2017

பலே பாண்டியாவிற்கு பிறகு சசிகுமார் தயாரித்து, நடிக்கும் படம் கொடி வீரன். பல ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை தொடங்கினார். இதில் கொடிவீரன் அமீர் கழன்று கொள்ள அன்னக்கொடியை கார்த்திகாவை வைத்து இயக்கினார். தனியாக நின்ற கொடி வீரனை தற்போது முத்தையா பிடித்துக் கொண்டார். ஜாதீய உணர்வுகளை தூக்கிப்பிடித்து அதனை பக்கா வில்லேஜ் கமர்ஷியல் படமாக்கும் எம்.முத்தையா குட்டிப்புலிக்கு பிறகு மீண்டும் சசிகுமாரோடு இணைந்திருக்கிறார்.
இதில் சசிகுமார் ஜோடியாக சாட்டை மகிமா நடிக்கிறார். இவர்களுடன் சனுஷா, பால சரவணன் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்புகள் மதுரை அருகே நேற்று கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்புகள் 20 நாட்கள் மதுரையைச் சுற்றி நடக்கிறது. ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ், செண்டிமெண்ட் கலந்த அக்மார்க் சசிகுமார் படமாக தயாராகிறது.
Tags: News, Hero, Star