தனுஷின் 'விஐபி 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி
Posted on 10/05/2017

தனுஷ் 'விஐபி 2' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த ஒரு வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவின்படி 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி வெளியாகிறது.
ஜூலை 28 என்பது தனுஷின் பிறந்த நாள் என்பதால் அவரது பிறந்த நாள் விருந்தாக இந்த படம் அதே தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் வெளிவந்த சில நிமிடங்களில் தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் #VIP2 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தமிழக அளவிற்கு டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, சரண்யா, விவேக், மோனல் கஜ்ஜார், ரிஷிகேஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். சமீர் தாஹிர் ஒளிப்பதிவாளராகவும், சத்யராஜ் நடராஜன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
Tags: News, Hero, Star