தறிவுடன்‌ நாவலை திரைப்படமாக எடுக்க காரணம்‌

தறிவுடன்‌ நாவலை திரைப்படமாக எடுக்க காரணம்‌

பேரிரைச்சலாய்‌ இடைவிடாது காதுகளில்‌ ஒலிக்கும்‌ இயந்திரச்‌ சத்தம்‌ கண்களைத்‌ இறக்க இயலாமல்‌ அப்பிக்‌ கிடக்கும்‌ பஞ்சுத்‌ துகள்கள்‌. பத்துப்‌ பதினான்கு மணிநேரம்‌ நின்று கொண்டே உழைத்துச்‌ சலித்த கால்கள்‌. திடீர்‌ திடீரென்று மூக்கில்‌ இரத்தம்‌ வடிவதும்‌. வயதான காலத்தில்‌ நெஞ்சு வலியும்‌, காசநோயும்‌ வருவது விசைத்தறி தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட அவல வாழ்க்கை.

அந்த கொடிய வாழ்க்கையில்‌ அனுபவப்பட்டு சுரண்டலுக்கெதிராய்‌ தொழிற்சங்கத்தில்‌ இணைந்துப்‌ போராடிய அனுபவங்களை தறியுடன்‌ நாவலைப்‌ படிக்கும்‌ நமக்கும்‌ கடத்துகிறார்‌ நாவலாசிரியர்‌.
 
இந்த நாவல்‌ ஒரு அரசியல்‌ நாவலாகும்‌, ஒரு நாவல்‌ புரட்‌ஏகர உள்ளடக்கத்தை மட்டுமே கொண்டு வடிவத்தில்‌ அழகியல்‌ அம்சம்‌ இல்லாது இருப்பின்‌ அது வெறும்‌ முழக்கங்களாகவும்‌, நிகழ்வுகள்‌ பதிவு செய்யப்பட்ட ஆவணமாகவும்‌ அமைந்து, கலைத்தன்மை இழந்து வாசகர்களுக்கு அலுப்பூட்டுவதாய்‌ ஆகிவிடும்‌. ஆனால்‌ இந்த நாவல்‌ அப்படிப்பட்டதன்று வடிவத்திலும்‌ உள்ளடக்கத்தாலும்‌ உயர்ந்து நிற்டுறது.
 
இந்த கதாசிரியர்‌ ஒரு விசைத்தறி தொழிலாளி. பாட்டாளியே படைப்பாளியாய்‌ அமையும்‌ போது அவனது வேதனைகள்‌ குமுறல்கள்‌ உழைப்புத்‌ துறையினருடனான அவரது அனுபவப்‌ பரிமாற்றங்கள்‌, போராட்ட அனுபவங்கள்‌ ஆகிய பல குணாம்சங்கள்‌ தனக்கேயுறிய முறையில்‌ உயிர்த்துடிப்புடன்‌ எழுத்தால்‌ வடிவமைக்க முடிகிறது.
 
இந்த நாவலின்‌ கதாநாயகன்‌ இரங்கன்‌ தொழிற்சங்கம்‌ என்ற வார்த்தையைக்‌ கேட்டாலே தீயை மிதிப்பதைப்‌ போலத்‌ துள்ளி குதிப்பான்‌. அவனை படிப்படியாய்‌ புரட்சியாளனாய்‌ மாற்றுவார்‌ தோழர்‌ சிவலிங்கம்‌.
 
ஒரு புரட்சிகர கட்சி‌ இரங்கனை போன்ற இளைஞர்களை எப்படி வென்றெடுத்து அவர்களை வர்கப்‌ போராட்டத்தின்‌ முன்னோடிகளாய்‌ மாற்றுகிறது என்பதை இந்த நாவல்‌ அழகுற சித்தரிக்கிறது.
 
இந்த நாவலின்‌ கதைக்‌ களத்தில்‌ அதன்‌ சுற்று வட்டாரத்திலும்‌ விசைத்தறி தொழிலாளர்‌ போராட்டங்கள்‌, அனைத்து ஜாதி உமைக்கும்‌ மக்களையும்‌ தட்டியெழுப்புகிறது. இந்த நாவலில்‌ படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பெண்‌ கதாப்பாத்துரமும்‌ சாதாரண உழைப்பாளர்‌ குடும்பங்களில்‌ பிறந்தவர்கள்‌. இந்த பெண்‌ கதாபாத்திரங்கள்‌ அனைத்துமே தங்கள்‌ இணையோடு கரம்‌ கோர்த்து புதுமைப்‌ பெண்களாய்‌ பரிணாம வளர்ச்சிப்‌ பெறுகின்றனர்‌. புரட்சிகர இயக்கத்தில்‌ சங்கமிக்கின்றர்‌. ஆணாதிக்கத்துற்கெதுராக பெண்‌ விடுதலைக்காக ஆண்‌, பெண்‌ சமத்துவத்துற்காக ஓங்கி குரல்‌ கொடுக்கின்றனர்‌. பெண்கள்‌ புரட்சியில்‌ பங்கேற்காமல்‌ அது சாத்தியமில்லை. இதை போன்ற வீரமும்‌, நெகிழ்ச்சியும்‌ என்னை இந்த நாவலைப்‌ படமாக்க தூண்டியது.
 
காலத்தையும்‌, களத்தையும்‌ பதிவு செய்வதுதான்‌ இலக்கியமும்‌ இரைப்படமும்‌ சமூக மாற்றத்திற்கான அக்கறையுடன்‌ இருக்க வேண்டும்‌ என்பார்கள்‌. நானும்‌ இந்த நாவலை இரைப்படமாக்குவதன்‌ மூலம்‌ கொஞ்சம்‌ அக்கறைப்பட்டிருக்கிறேன்‌ என்றுதான்‌ நினைக்கத்‌ தோன்றுகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top