புது தொழில் தொடங்கிய ராஷ்மிகா!
Posted on 25/06/2022

தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவேண்டும் என நீண்ட காலமாக வெளிப்படையாக கேட்டு வந்த நிலையில் அந்த ஆசை இந்த படம் மூலமாக நிறைவேறி இருக்கிறது.
வாரிசு படம் மட்டுமின்றி மேலும் சில படங்களை ராஷ்மிகா கைவசம் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் அவர் தற்போது ஒரு புது தொழிலையும் தொடங்கி இருக்கிறார். Plum என்ற அழகு சாதன நிறுவனத்தில் அவர் முதலீடு செய்து இருக்கிறார். அவர் பிராண்ட் அம்பாஸடராகவும் செயல்பட இருக்கிறார்.
ராஷ்மிகா மூலமாக தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்க திட்டமிட்டு இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
Tags: News, Hero