விவேக் மறைவிற்கு ரஜினிகாந்த் இரங்கல்!
Posted on 17/04/2021

நடிகர் விவேக் காலமானார் என்ற செய்தி அறிந்து திரையுலகினரும், ரசிகர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் முதலைமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ், பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது.
சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள், விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டுள்ளார்.