மகா சிவராத்திரியை கொண்டாடும் 'ராதே ஷ்யாம்'

மகா சிவராத்திரியை கொண்டாடும் \'ராதே ஷ்யாம்\'

மகா சிவராத்திரியை கொண்டாடும் வகையில் பிரபாஸ் - பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு திரை உலகில் இன்றும் காதல் கதைகளுக்கு மவுசு குறையவில்லை. பிரம்மாண்டமான பின்னணி, மனதை மயக்கும் இசை, கதாபாத்திர வடிவமைப்பு, ரசிகர்களை உளவியல் ரீதியாக உந்தித் தள்ளும் திரைக்கதை போன்றவற்றால் தெலுங்கு திரை உலகம் இந்திய அளவிலான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 'பாகுபலி' படத்திற்குப் பிறகு உலகளவிலான ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் நடிகர் பிரபாஸ், தன்னுடைய 40 வயது இளமையை நம்பி காதல் கதையான 'ராதே ஷ்யாம்' படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக தமிழில் 'முகமூடி' என்ற படத்தில் அறிமுகமாகி ,பிறகு தெலுங்கில் நடிக்க தொடங்கி, 'ராசியான நடிகை' என்று பெயர் பெற்று, உச்சத்தில் இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார்.
 
காதலர்களின் சொர்க்கம் எனப்படும் ஐரோப்பிய நாடுகளின் பின்னணியில் படமாக்கப்பட்டிருக்கும் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. புராணகால காதலர்களான சிவன் - பார்வதி தொடர்புடைய மகா சிவராத்திரி தினமான இன்று அதனை கொண்டாடும் வகையில் இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்திருக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'ராதே ஷ்யாம்' படத்தின் புதிய போஸ்டருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top