கோலாகலமாக நடந்த RRR திரைப்பட 50வது நாள் கொண்டாட்டம்!

கோலாகலமாக நடந்த RRR திரைப்பட 50வது நாள் கொண்டாட்டம்!

RRR திரைப்படம் இந்திய சினிமா ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட படம். எஸ்.எஸ். ராஜமௌலி பாகுபலி படத்தை தொடர்ந்து இந்த பிரம்மாண்ட படத்தை எடுத்திருக்கிறார். 

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருப்பதே மக்களால் அதிகம் கொண்டாடப்படுகிறது.
 
படத்தின் கதை, பாடல்கள் என ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் நிறைய விஷயங்கள் படத்தில் உள்ளன.
 
ரூ. 550 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் கடந்த மார்ச் 24ம் தேதி ரிலீஸ் ஆனது. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
 
படம் ரிலீஸ் ஆன நாள் முதல் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை ரூ. 1, 132 கோடி வரை வசூலித்துள்ளதாம். தற்போது படம் ரிலீஸ் ஆகி 50வது நாளை எட்டியுள்ள நிலையில் ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டுள்ளனர்.
 
அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை RRR படக்குழுவே வெளியிட்டுள்ளனர்.  https://twitter.com/i/status/1525151437071994880

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top