அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் பில்லா பாண்டி!

அஜீத் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் பில்லா பாண்டி!

படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ். தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக "பில்லா பாண்டி" எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். மேயாத மான் புகழ் இந்துஜா இப்படத்தின் கதாநாயகியாக நடிக்கின்றார். சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார். மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும் படம் பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. "பில்லா பாண்டி" திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:
தயாரிப்பு - K.C.பிரபாத்
இணை தயாரிப்பு - PA கோடீஸ்வரன்
இயக்கம் - சரவணஷக்தி
கதை திரைக்கதை வசனம் - எம்.எஸ்.மூர்த்தி
ஒளிப்பதிவு - M.ஜீவன்
இசை - இளையவன்
படத்தொகுப்பு - ராஜா முகமது
கலை - மேட்டூர் சௌந்தர்
பாடல்கள் - கலைக்குமார், தனிக்கொடி, மீனாட்சி சுந்தரம்
நடனம் - கல்யாண், விஜி, சேண்டி
சண்டைப்பயிற்சி - சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு - நிகில்

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top