பா ரஞ்சித்தின் ரைட்டர
Posted on 07/12/2020

இயக்குனரும் தயாரிப்பாளருமான பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'ரைட்டர்' என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியாகி இருக்கிறது.
தமிழ் திரை உலகில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும், இயக்குனராகவும், சமூக பொறுப்பு மிக்கவருமான நடிகர் சமுத்திரகனி நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு 'ரைட்டர்' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்குகிறார். 96 பட புகழ் இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார்.
'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' விரைவில் வெளியாகவிருக்கும் 'குதிரை வால்' ஆகிய படங்களைத் தயாரித்த இயக்குனரும், தயாரிப்பாளருமான பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன் சார்பில் இப்படம் தயாராகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது.
சமூக மாற்றத்திற்கு வித்திடும் எழுத்தாளரை பற்றிய படம் என்பதாலும், சமுத்திரகனி நடிக்கவிருப்பதாலும் 'ரைட்டர்' படத்திற்கான தலைப்பு வெளியானவுடன் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.