திகிலூட்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”

திகிலூட்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”

பல பேய் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”

இப்படத்தை இயக்குனர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். “காக்கா முட்டை” புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். சுரேஷ் ரவி, முண்டாசுப்பட்டி புகழ் ராம்தாஸ் (முனிஸ்காந்த்), ரமேஷ் திலக், யோகிபாபு, “கிடாரி” படத்தின் இசையமைப்பாளர் “தர்புகா” சிவா, MIME கோபி ஆகியோர் நடிக்கின்றனர். யுத்தம் செய் மற்றும் முகமுடி படங்களில் நடித்த செல்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரும் இனிமேல் இப்படிதான் படத்தின் இசையமைப்பாளருமான சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியனின் துணை ஒளிப்பதிவாளர் விஷ்ணு.ஸ்ரீ.K இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிநாத் படத்தொகுப்பையும், பாலசுப்புரமணியம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

“தி இந்து” நாளிதழின் குடும்பத்தை சார்ந்த ரோஹித் ரமேஷ் “WTF ENTERTAINMENT” என்ற நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பாளராக G.A.ஹரி கிருஷ்ணன்  “MOMENT ENTERTAINMENT” சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தை அடுத்த மாதம் நவம்பர் 18 உலகமெங்கும் வெங்கடேஷ் ராஜா “VENKEY’S FILM INTERNATIONAL” நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகிறார்.

Tags: News, Hero, Art and Culture

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top