நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் திருமணம்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகள் திருமணம்.

முன்னணி நட்சத்திரங்கள் வாழ்த்து.

தமிழ் திரை உலகின் சிறந்த குணசித்திர நடிகரும், காமெடி நடிகருமான எம். எஸ். பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கும், தொழிலதிபர் அகுல் சுதாகருக்கும் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் நேரில் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர்.
 
நடிகர் எம். எஸ். பாஸ்கர் மற்றும் திருமதி ஷீலா பாஸ்கரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் என். ஏ. சுதாகர் மற்றும் திருமதி சீனா சுதாகரின் மகன் அகுல் சுதாகருக்கும் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த வைபவத்தில் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரங்களான சரத்குமார், விஜயசேதுபதி, விஜய் அண்டனி, டி ராஜேந்தர், நாசர், ராதாரவி, ஆனந்தராஜ், அருண்விஜய், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு, மயில்சாமி, ரமேஷ்கண்ணா, கருணாஸ், ஆர். பாண்டியராஜன், சூரி ,பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி, சாம்ஸ், சென்றாயன் ஆகிய நடிகர்களும், திருமதி சினேகா, தேவதர்ஷினி, குட்டி பத்மினி, சந்தியா, சாந்தினி ஆகிய நடிகைகளும், எஸ் ஏ சந்திரசேகர், விக்ரமன், வி சேகர், சித்ரா லட்சுமணன், ஆர் பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார் உள்ளிட்ட பல இயக்குனர்களும், எடிட்டர் மோகன், டி சிவா, தனஞ்ஜெயன், அழகன் தமிழ்மணி உள்ளிட்ட தயாரிப்பாளர்களும், இசை அமைப்பாளர் தேவா, பின்னணி பாடகர் மனோ, ஊடகவியலாளர் நக்கீரன் கோபால், தென்சென்னை முன்னாள் மக்களவை உறுப்பினர் ஜெ. ஜெயவர்தன் உள்ளிட்ட பலர் பங்குபற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top