மாயத்திரை

மாயத்திரை

மாயத்திரை -இது ஒரு பேய் படம் .ஆனால் வழக்கமான பேய் படங்களிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும் .எப்படியென்றால் பொதுவாக  பேய் படங்களில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் அதாவது ஹீரோ ஹீரோயினி ஏதாவது ஒரு சூழ்நிலையில வில்லனால பாதிக்கப்பட்டு இறந்து போய்விடுவார்கள் . பின்னால அவர்கள் பேயாக  மாறி வில்லனை பழி வாங்குவார்கள் . ஆனால் என்என்னுடைய படத்தில் வருகிற பேய் யாரையும் பழிவாங்கவில்லை . தனக்கு துரோகம் செய்தவர்களை இந்த பேய் தண்டிக்கவில்லை .மாறாக மன்னிக்கிறது .  இந்த பேய் தன் காதலையே விட்டுக் கொடுத்து தியாகம் செய்கிறது . அது ஏன்? எதற்கு என்பதுதான் இந்த படத்தின் கதை .இந்தப் படத்தை பற்றி சுருக்கமாக  சொல்லவேண்டுமென்றால் ஒரு பேயின் பேரன்பைச் சொல்கின்ற படம். அதாவது சாத்தான் சாமியான கதை (அல்லது) ஒரு பேய் தேவதையான கதை  .அதிகமான வன்முறை காட்சிகளோ ஆபாசமான காட்சிகளோ இந்த படத்தில் இல்லை .  அதனால் குடும்பத்துடன் தைரியமாக  இந்த படத்தை பார்க்கலாம் என உறுதி அளிக்கிறேன். இன்றைய கார்ப்பரேட் யுகத்தில் நமது  பாரம்பரியத்தையும் குல தெய்வ வழிபாட்டையும் இன்றைய தலைமுறையினர் கொஞ்சம் கொஞ்சமா மறந்து வந்துகொண்டு இருக்கிறார்கள் . அதை நினைவூட்டும் விதமாக குலதெய்வத்தின் சிறப்புகளை உரையாடல் வழியாக பதிவு செய்திருக்கிறேன்.

இந்த படத்தினுடைய சிறப்பம்சங்கள்:
 
இந்தப் படத்தில் வர்ற கதாபாத்திரங்கள் உயிரோடு இருக்கும்போது எந்த மனநிலையில் இருக்கிறார்களோ இறந்த பிறகும் அதே மனநிலையிலும் அதே குணநலன்களோடும்  கடைசி வரைக்கும் இருப்பார்கள் . அதுமாதிரி கதாபாத்திரங்களை வடிவமைத்து இருக்கிறேன் .இந்த படத்தில் வருகிற ஹீரோ  சவுண்ட் என்ஜினியராக வேலை செய்பவர் . இதுவரைக்கும் தமிழ் சினிமாவுல சவுண்ட் இன்ஜினியரை சரியாக யாரும் பதிவு செய்ததில்லை . மியூசிக் டைரக்டர் எஸ். எஸ். தமன் ராசாத்தியேன்னு ஒரு பாட்டுக்கு இசை அமைத்திருக்கிறார் . அது இந்த படத்திற்கு ஹைலைட்டாக  இருக்கும். இந்தப் படத்தில் அதிகமா பயமுறுத்தும் காட்சிகள் இருக்காது. அதனால் ஆறிலிருந்து அறுபது வரை உள்ள அனைவரும் குடும்பத்தோடு வந்து படம் பார்க்கலாம் . இது ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top