என்ன பண்ணாலும் கலாய்க்கிறாய்ங்க!!!
Posted on 04/01/2018

தனுஷ் மீது மக்களுக்கு என்ன கடுப்போ தெரியவில்லை. அவருக்கு ஜோடியாக எந்த நடிகை நடித்தாலும், அவரை எச்சரிக்கும் விதமாக சமூகவலைத்தளங்களில் மீம்ஸ் பறக்கும். 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'வட சென்னை' ஆகிய படங்களில் நடித்து வரும் தனுஷ் அடுத்து 'மாரி-2' படத்தில் நடிக்கிறார்!
சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த படத்திற்கு இசை அமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். மாரி -2 படத்தில் தனுஷ் ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். இந்த தகவல் வெளியான உடனேயே மலர் டீச்சரை கலாய்க்கத் தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், இந்த படத்தின் ஒரு முக்கிய கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் தற்போது தனுஷுடன் வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடிப்பதை வைத்து மீம்ஸ்கள் உலாவரத் தொடங்கிவிட்டன.
த்ரிஷா, அமலாபால் போன்ற நடிகைகளை உதாரணம் காட்டி வரலட்சுமியை கலாய்க்கும் ரசிகர்கள் விஷாலையும் எச்சரித்து வருகின்றனர்.
Tags: News, Hero, Star