சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மறைவு

சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மறைவு

'சரவணன் - மீனாட்சி', 'பாரதி கண்ணம்மா' உள்ளிட்ட பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்த நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக திடீரென்று 22.03.2021 மரணமடைந்தார்.

'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சி தொடரின் இரண்டாவது சீசனில் நாயகி ரச்சிதா மகாலட்சுமிக்கு தந்தையாக நடித்தவர் நடிகர் வெங்கடேஷ். அதன் பிறகு 'பாரதி கண்ணம்மா' சீரியலில் கண்ணம்மாவுக்கு தந்தையாகவும் நடித்து வருகிறார். 'ஈரமான ரோஜாவே' சீரியல் என்றும் அவர் நடித்து வந்தார்.
 
இந்நிலையில் 22.03.2021 மதியம் 2 மணி அளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அவருக்கு சின்னத்திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
 
21.03.2021 காலையில் நடிகர் தீப்பெட்டி கணேசனின் மரணம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருந்த நிலையில் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் மரணமும் மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top