விவேகம் படத்திலிருந்து அடுத்த ஹிட் கொடுக்க வரும் "காதலடா"!

விவேகம் படத்திலிருந்து அடுத்த ஹிட் கொடுக்க வரும் \

விவேகம் படத்திலிருந்து வரும் ஒவ்வொன்றும் ஒரு சாதனை படைக்க அடுத்தது என்ன செய்ய போகிறது என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.

அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் சர்வைவா மற்றும் தலை விடுதலை ஆகிய பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து இணணயதளங்களை அலற வைத்தது. எங்கு திரும்பினாலும் இந்த பாடல்தான். செல்போன் ரிங்டோனாகவும் இந்த பாடல்கள் மாறியிருந்தன என்றால் பார்த்துக் கொள்ளுங்க... 

இந்நிலையில் அடுத்து வெளியாகும் இப்படத்தின் பாடல் மெலடி ரொமான்ஸ் பாடல் என்று ஏற்கனவே இசையமைப்பாளர் அனிருத் அறிவித்திருந்தார். அதன்படி 'காதலடா' என்று தொடங்கும் இந்த பாடல் கவிஞர் கபிலன் வைரமுத்து எழுதியதாம். முதன்முதலாக அஜித்துக்காக அனிருத் இசையில் கபிலன் எழுதிய இந்த பாடல் நாளை 20ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top