கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்!

கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார்!

கே.ஜி.எஃப். இரண்டு பாகங்களிலும் இடம்பெற்ற மோகன் ஜுனேஜா மரணம் அடைந்த நிகழ்வு கே.ஜி.எஃப். ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.ஜி.எஃப். பட நடிகர் மோகன் ஜுனேஜா காலமானார். இதையொட்டி ரசிகர்களும், திரைத்துறையினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
54 வயதான மோகன் ஜுனேஜா நீண்ட  நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவருக்கு கல்லீரல் பிரச்னை இருந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்துள்ளது.
 
மோகனின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரைத்துரையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் மோகன் நடித்துள்ளார். இருப்பினும், கே.ஜி.எஃப். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அவர் நடித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top