ஒரு வழியா அமலா பாலுக்கு 'அது' நடக்கப்போகுது!

ஒரு வழியா அமலா பாலுக்கு 'அது' நடக்கப்போகுது!

நடிகை அமலா பால் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அந்த நல்ல விஷயம் விரைவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள மொழியின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அமலா பால் தமிழில், விக்ரம், விஜய், சூர்யா தனுஷ் என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். இதனால் சொற்ப நாட்களிலேயே டாப் நடிகையாக உயர்ந்தார் அமலா பால்.
 
சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே இயக்குநர் ஏஎல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனதும் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த அமலா பால், பின்னர் மீண்டும் நடிக்க விரும்பினார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் கணவர் ஏஎல் விஜய்யை விவாகரத்து செய்தார்.
 
இதையடுத்து செகண்ட் இன்னிங்ஸை தொடங்கினார் அமலா பால். ஆனால் ஆடை படத்தில் நடித்த பிறகு அவரது மார்க்கெட் மொத்தமாய் சரிந்தது. ஆடை படத்தில் நிர்வாண கோலத்தில் நடித்த அமலா பாலுக்கு அதன் பிறகு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார்.
 
அதோடு அவர் ஏற்கனவே நடித்திருந்த அதோ அந்த பறவை போல படத்தை ரிலீஸ் செய்யவும் யாரும் முன் வரவில்லை. புதிய பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் அமலா பால். இந்நிலையில் நடிகை அமலா பாலின் அதோ அந்த பறவை போல படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
 
கேஆர் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் இளம் தொழிலதிபராக நடித்துள்ள அமலாபால் காட்டுக்குள் சென்று சிக்கி தவிப்பதாகவும் அப்போது அவர் சந்திக்கும் இன்னல்கள் என்னென்ன அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதே படத்தின் கதை. நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: News, Hero

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top