மெர்சலில் மீண்டும் விஜய் வடிவேலு காமெடி காம்போ!

மெர்சலில் மீண்டும் விஜய் வடிவேலு காமெடி காம்போ!

அட்லீ இயக்கத்தில் 'விஜய்' இயக்கும் மெர்சல் படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் நடிகர், நடிகைகள், திரைப் பிரபலங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கடந்த 2011 தேர்தல் பிரசாரத்தால் சினிமாவில் சரியாக வாய்ப்புக் கிடைக்காத வடிவேலு இந்தப் படத்தில் நடிக்கிறார். இந்த விழாவில் வடிவேலு பெயரைச் சொன்னதும் ரசிகர்கள் பலத்த கைதட்டலோடு தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.

'மெர்சல்' படத்தில் நடிகர் வடிவேலு விஜய்க்கு அப்பாவாக நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. வெளியான படத்தின் ஸ்டில் ஒன்றில் விஜய், வடிவேலுவையும், கோவை சரளாவையும் தோள் மேல் கை போட்டுக் கூட்டிவருவதாக இருக்கிறது. அந்தப் படத்தைப் பார்த்தால் வடிவேலு விஜய்யின் தந்தையாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

இயக்குநர் அட்லீ பேசும்போது, 'வடிவேலு இந்தப் படத்தில் காமிக், எமோஷனல் கேரக்டரில் நடித்திருக்கிறார். மறைந்த நடிகர் மணிவண்ணனைப் போலான ரோலில் சிறப்பாகச் செய்திருக்கிறார்' எனக் கூறினார். வடிவேலுவின் பெயரைக் கேட்டதும் ரசிகர்கள் விசிலடித்து தங்கள் எதிர்பார்ப்பைத் தெரிவித்தனர்.

வடிவேலு, படங்களில் நடிப்பது குறைந்தபிறகுதான் மீம்ஸ் கலாச்சாரம் வெகுவாகப் பிரபலமானது. அவர் பேசிய வசனங்கள், அவரது ரியாக்‌ஷன்கள் என எல்லாம்தான் மீம் க்ரியேட்டர்களுக்கு பேஸிக் மெட்டீரியல். வடிவேலுதான் மீம்ஸ் உலகின் அரசன். எனவே, இளைய தலைமுறையினர் அவரை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள். இந்தப் படத்தில் விஜய்யுடன் நடித்திருப்பதன் மூலம் அவர் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், விஜய் - வடிவேலு காமெடி காம்போ அசாத்திய ஹிட் அடித்தது அனைவருக்கும் தெரிந்ததே!

'ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய்யும் வடிவேலுவும் முதன்முதலில் இணைந்து நடித்தனர். அதற்குப் பிறகு பல படங்களில் இருவர் சேர்ந்து செய்த நிறைய காமெடிகள் அதகளம். வடிவேலுவின் பாடி லாங்குவேஜ், விஜய்யின் கவுன்டர்கள் இணைந்தால் அந்தப்படம் அல்டிமேட் சிரிப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும்.

'ப்ரெண்ட்ஸ்' படத்தின் வடிவேலு, விஜய் காமெடி காலம் கடந்தும் சிரிக்க வைக்கும். கான்ட்ராக்டர் நேசமணியாகிய வடிவேலுவை விஜய், சூர்யா, ரமேஷ்கண்ணா ஆகியோர் சேர்ந்து படுத்தும் பாடு ரணகள ரவுசு. இருவரும் இணைந்து நடித்த படங்களில் இதுதான் காமெடியின் உச்சம். 'என்ன பீலிங்கா... எனக்குத்தான்டா பீலிங்கு...' எனச் சொல்லும் வசனம் உட்பட அந்தப் படத்தின் பல காமெடி வசனங்கள் இன்றும் பலருக்கு மோஸ்ட் ஃபேவரிட்.

'பகவதி' படத்தில் விஜய்யின் சிறிய ஓட்டலில் வேலை செய்யும் டீ மாஸ்டராக நடித்திருப்பார் வடிவேலு. அவருக்கு அந்தப் படத்தில் இன்னொரு 'வைப்ரேஷன்' கேரக்டரும் உண்டு. விஜய்யிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் காட்சிகள், பெஞ்சமினிடம் கோர்த்துவிட்டு மல்லுக்கட்டவிடும் காட்சிகள் என எல்லாமே குபீர் சிரிப்புக்கு கியாரண்டி.

'சச்சின்' படத்தில் பல வருடங்களாக கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் மாணவராக வருவார் வடிவேலு. படம் முழுக்க ஸ்டைலாக 'ஹே... ஷாலும்மா...' என்றபடி நடந்துகொண்டே திரியும் அவரது பாடி லாங்குவேஜ் அசத்தல். விஜய்யும் அவரும் சந்திக்கும் இடங்களில் எல்லாம் இருவரும் காமெடி ரேஸ் ஆடியிருப்பார்கள்.

'போக்கிரி' படத்தில் தற்காப்புக்கலை மாஸ்டராக வருவார் வடிவேலு. விஜய், போலீஸ்காரர் என எல்லோரிடமும் மாட்டிக்கொண்டு அவர் படும் பாடு, அவரிடம் மாட்டிக்கொண்டு அவர்கள் படும் பாடு என சிரிப்பு மத்தாப்பு வெடிக்கும். 'சுட்டும் விழிச் சுடரே...' என அசினுடன் அவர் ஆடிய டூயட் மெர்சலுக்கெல்லாம் மெர்சல்.

'காவலன்' படத்தில் அமாவாஸையாக நடித்த வடிவேலு செய்யும் அட்டகாசங்கள் காமெடி அட்ராசிட்டி. லேடீஸ் ஹாஸ்டலில் மாட்டிக்கொண்டு முரட்டு அடி வாங்குவது, விஜய்யிடம் அயர்ன் பாக்ஸில் சூடு வாங்குவது என செமையாக ஸ்கோர் செய்வார். 'கண்ணதாசா... யேசுதாஸா... பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு...' என கலகலக்க வைத்த காமெடி ஜோடி அது.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top