சினிமாவிற்கு மீண்டும் வருகிறாரா ஷாலினி?
Posted on 12/02/2021

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து பின்னர் கதாநாயகியாகவும் வலம் வந்தவர் ஷாலினி. அந்த சமயத்தில் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் இணைந்து நடித்தபோது அவர்களுக்கிடையே காதல் உருவாகி திருமணம் செய்து கொண்டனர். தற்போது அஜித்-ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பிறகு 21 வருடங்கள் முழுமையாக சினிமாவை விட்டு விலகி இல்லத்தரசியாக இருந்து வரும் ஷாலினி தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக செய்தி ஒன்று சோசியல் மீடியாவில் வலம் வருகிறது.