பரணியைப் போல ஓவியாவையும் பழிவாங்குகிறதா பிக்பாஸ் குடும்பம்?

பரணியைப் போல ஓவியாவையும் பழிவாங்குகிறதா பிக்பாஸ் குடும்பம்?

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறார் ஓவியா. இனியும் அந்த வீட்டில் உள்ளவர்கள் செய்யும் செயல் தாங்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளாராம். ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரிடையே காதலுக்காக நடந்து வரும் பிரச்னை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றவர்கள் தன்னை ஓரம்கட்டி, முதுகுக்கு பின்னால் தவறாக பேசுவதால் மனமுடைந்துள்ள ஓவியா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் உள்ளார்.

அதற்காக இரவு கொட்டும் மழையில் வெளியில் படுத்திருந்தார். பின்னர் சினேகன், ஆரவ் ஆகியோர் நீண்ட நேரம் பேசி அவரை உள்ளே அழைத்து வந்தனர். பின்னர் உண்ணாவிரதத்தில் இறங்கினார் ஓவியா, யார் சொல்லியும் சாப்பிட மறுத்த அவர் பிக் பாஸ் தன்னை அழைத்து பேசினால் மட்டுமே இது முடிவுக்கு வரும் என்று கூறியுள்ளார். இதை பார்த்த ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top