மீண்டும் வில்லனாக நடிப்பேன் - நடிகர் அருண் விஜய் பேட்டி!
Posted on 22/06/2022

தமிழ் சினிமாவில் மிகமுக்கியமான நடிகர்களில் ஒருவர் அருண் விஜய்.
இவருடைய நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் யானை. இப்படத்தை ஹரி இயக்கியுள்ளார்.
கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் வருகிற ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் தற்போது நடிகர் அருண் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ப்ரோமோஷன் பேட்டியில் பேசிய அருண் விஜய் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த பிறகு கதாநாயகனாகவே நடித்து வருகிறேன். அதேசமயம் மீண்டும் நல்ல கதைகள் கிடைத்தால் வில்லனாக நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார் அருண் விஜய்.
Tags: News