ஹிப்ஹாப் தமிழாவுக்கு நிச்சயதார்த்தம் - ரசிகைகள் ஃபீலிங்ஸ்!
Posted on 30/11/2017

ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளரான ஹிப்ஹாப் தமிழா ஆதி மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோவானார். தொடர்ந்து இசையில் கவனம் செலுத்தி வரும் அவரை தேடி நடிக்கவும் வாய்ப்பு வருகிறது. இந்நிலையில் ஆதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இனி சிங்கிள் கிடையாது. உங்களின் ஆசி தேவை. நன்றி என்று தனது திருமணம் குறித்து ட்வீட்டியுள்ளார் ஆதி. ஆதியின் ட்வீட்டை பார்த்த சிலர் இனிமேல் அவர் சிங்கிள் டிராக் வெளியிட மாட்டார், படங்களில் மட்டுமே வேலை செய்யப் போகிறார் என்று தவறாக நினைத்துக் கொண்டனர். ஆதியின் திருமண நிச்சயதார்த்தம் பற்றிய ட்வீட்டை பார்த்த இரண்டு ரசிகைகள் கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணியுள்ளனர்.
ஆதி அறிவிப்பு வெளியிட்ட கையோடு அது பற்றி மீம்ஸும் போட்டுவிட்டார்கள்.
Tags: News, Hero, Star