நிகில் கம்யுனிகேஷனுடன் இணைந்து வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாளும் டூடுல் மாங்க்
Posted on 05/09/2016

அர்த்தமுள்ள எழுத்துக்களுடன அழகான வடிவங்களை அமைக்கும் டூடுல் மாங்க் குழுமம், பல ஆண்டுகளாக திரைத்துறையில் பல புது விளம்பர யுக்திகளை செய்த நிகில் கம்யுனிகேஷன் குழுமத்துடன் இணைந்து திரைப்படங்களுக்கான வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாள துவங்கியுள்ளது.
இதன் முதல் தொடக்கமாக நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான கிடாரி படத்தின் விளம்பர படங்களை வெளியிட்டுள்ளது. இப்படங்களை ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் வெளியிட நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்ட சசிகுமார் பெற்றுக்கொண்டார். தனது பத்தாவது படமான கிடாரியை நிறைவு செய்ததன் நினைவாக சசிகுமார் நடித்த அனைத்து படங்களில் இருந்தும் அவர் பேசிய பிரபலமான வாக்கியத்தை படத்தில் இணைந்து வெளியிடப்பட்டது. இந்த விளம்பரத்திற்கு "வாட்ஸ்அப் டயலாக் ஸ்டிக்கர்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
விழாவில் கிடாரி படத்தின் இயக்குனர் பிரசாத் முருகேசன், நடிகை நிகிலா விமல், டூடுல் டூடுல் மாங்க் நிறுவனர் ஸ்ரீராம சந்தோஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
Tags: News, Hero, Star