நடிகை நதியா எப்படி இருக்கின்றார் தெரியுமா?

நடிகை நதியா எப்படி இருக்கின்றார் தெரியுமா?

நடிகை நதியாவிற்கு 52 வயது ஆனாலும் இன்னும் கூட மிக இளமையாக தோற்றமளிப்பவர்.

இவரது உண்மையான பெயர் ஸரீனா மொய்டு. மும்பையில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
 
தமிழில் பூவே பூச்சூடவா, சின்ன தம்பி பெரிய தம்பி, பாடு நிலாவே, அன்புள்ள அப்பா, ராஜாதி ராஜா என பல படங்களில் ஹீரோயினாக நடித்தார்.
 
1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பின்னர் கடந்த 2004ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார்.
 
அவருக்கு மிக பெரிய பெயரை குறித்த படம் பெற்று கொடுத்திருந்தது. நடிகை நதியா திரையுலகில் அறிமுகமானதில் இருந்து தற்போது வரை அதே இளமையுடனும், உற்சாகத்துடனும் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் தனது இளமை ரகசியம் குறித்து அவர் கூறுகையில், இது எனது பெற்றோரின் மரபணுவில் இருந்து வந்து இருக்கலாம்.
 
நான் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவள். உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு, தூக்கம், எல்லோரையும் நேர்மையாக அணுகுவது இதுதான் காரணம். நேர்மையான எண்ணங்கள் நம்மை இளமையாக வைத்துக்கொள்ளும் என்று பல மேடைகளில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, இவருக்கு ஜனா, ஷனம் என்று இரு மகள்கள் உள்ளனர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றனர்.

Tags: News, Beauty, Hero, Madurai News, Lifestyle

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top