டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’ - ZEE5 Exclusive

டிசம்பர் 25 ஆம் தேதி முதல் இயக்குனர் பாலாஜி தரணிதரனின் ‘ஒரு பக்க கதை’ - ZEE5 Exclusive

புதிய மற்றும் சிறப்பான பொழுதுபோக்கை தொடர்ச்சியாக வழங்கும் ZEE5, ஒ.டிடி. தளத்தில் தனது வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ZEE5 இப்போது அதன் அடுத்த Exclusive படமாக, தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஒரு பக்க கதை’’ படத்தை வெளியிடவுள்ளது.

பிரபல இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கியுள்ள இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திறமையான இந்த இருவரும் நடிகர்களாக அறிமுகமான படம் ‘ஒரு பக்க கதை’ என்பது குறிப்பிடத் தக்கது.
 
ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன் மூலம் ஏற்படும் சவால்களையும் சுவாரஸ்யமாக கூறும் படமே ‘ஒரு பக்க கதை’
 
பிரேம்குமார்.சி ஒளிப்பதிவைக் மேற்கொள்ள, கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
 
தயாரிப்பு: வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ்
திரைக்கதை, வசனம்: பாலாஜி தரணிதரன், மரியா
படத்தொகுப்பு: ஆர்.கோவிந்தராஜ்
கலை இயக்குனர்: வினோத் ராஜ்குமார்
டிசைன்ஸ்: கோபி பிரசன்னா
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, கதிர்மொழி
 
ZEE5 Exclusive - ‘ஒரு பக்க கதை’ டிசம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top