தனுஷின் 'நானே வருவேன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Posted on 18/01/2021

நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராக இருக்கும் புதிய படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
'காதல் கொண்டேன்', '7ஜி ரெயின்போ காலனி' , 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டிருக்கிறது. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை தயாரித்த வி கிரியேஷன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இப்படத்தை தயாரிக்கிறார்.
அண்மையில் செல்வராகவனும் தனுஷும் இணைந்து புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் இருவரும் இணைந்து உருவாக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நிஜ வாழ்க்கையில் சகோதரர்களாக இருக்கும் இயக்குனர் செல்வராகவனும், நடிகர் தனுஷும் இணைந்து உருவாகும் புதிய படத்திற்கு 'நானே வருவேன்' என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது. இதன்மூலம் இவ்விருவரும் திரில்லர் வித் எக்சன் ஜேனரில் உருவாகும் புதிய திரைக்கதையில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.