பான் இந்தியா படத்தில் நடிக்கும் தீப்ஷிகா!
Posted on 12/09/2022

பாபி சிம்ஹா அடுத்து நடிக்கும் படம் ராவண கல்யாணம். தெலுங்கு நடிகர் சந்தீப் மாதவ் இந்த படத்தில் அவருடன் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்றது.
சந்தீப் மாதவ் ஜோடியாக பிரபல நடிகை தீப்ஷிகா நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது அவருக்கு மூன்றாவது தெலுங்கு படம். ஏற்கனவே அவர் மைக்கேல் என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராவண கல்யாணம் படத்தில் அர்ஜுன் ரெட்டி இசையமைப்பாளர் ரதன், ஜதி ரத்னாலு பட புகழ் ஒளிப்பதிவாளர் சித்தம் மனோகர் ஆகியோர் பணியாற்ற இருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என மொத்தம் நான்கு மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என தெரிவித்து இருக்கிறார்கள்.
Tags: News