வாரிசு படத்திற்காக தளபதி விஜய் வாங்கியுள்ள சம்பளம்!
Posted on 24/06/2022

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைகிறார். ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், குஷ்பூ, பிரபு என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள்.
மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வரும் வாரிசு படத்தின் First லுக் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் இப்படத்தை காண ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில், பிரமாண்டமாக உருவாகி வரும் வாரிசு படத்திற்காக நடிகர் விஜய்க்கு ரூ. 118 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் சம்பளம் ரூ. 100 கோடியை எட்டியுள்ளது என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது வாரிசு படத்திற்காக விஜய் ரூ. 118 கோடி சம்பளம் வாங்கியுள்ளது ஷாக் கொடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் தோல்வியடைந்துள்ள நிலையில், அடுத்த படத்திற்கு விஜய் சம்பளத்தை உயர்த்தியுள்ளாரே என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
Tags: News