பிக்பாஸ் - ல என்னதான்யா நடக்குது?

பிக்பாஸ் - ல என்னதான்யா நடக்குது?

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஜுன் மாதம் 25ம் தேதி முதல் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. 15 பேர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முதல் சில நாட்களிலேயே உடல் நலம் காரணமாக நடிகர் ஸ்ரீ விலகிக் கொண்டார். அதன் பின் ஒவ்வொரு வாரமும் ரசிகர்கள் ஆன்லைனில் அளிக்கும் வாக்குகள், மிஸ்டு கால்கள் மூலம் குறைவான வாக்கு பெற்ற போட்டியாளர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்.

முதல் வாரத்தில் அனுயா, அடுத்து கஞ்சா கருப்பு, ஆர்த்தி, நமீதா, ஜுலி, சக்தி, காயத்ரி, ரைசா ஆகியோர் நேயர்கள் அளித்த குறைந்த வாக்குகளால் வெளியேற்றப்பட்டார்கள். இடையில் பரணி போட்டியாளர்களால் ஒதுக்கப்பட்டதாலும், ஓவியா, சக போட்டியாளர் ஆரவ்-வுடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையாலும் அவர்களாகவே நிகழ்ச்சியிலிருந்து விலகினர்.

நேற்று, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களில் ஆர்த்தி, ஜுலி, சக்தி, காயத்ரி, பரணி ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் உரையாடிய கமல்ஹாசன் கடைசியில் நிகழ்ச்சியில் மீண்டும் யாருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய விருப்பம் உள்ளது என்று கேட்க, ஆர்த்தியும், ஜுலியும் மட்டும் உள்ளே போக விருப்பம் தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து ஜுலி, ஆர்த்தி இருவரும் நேற்று வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதற்கான புரோமோவை இன்று விஜய் டிவி வெளியிட்டது.

அதன் கமெண்ட் பகுதிகளில் நேயர்கள் அனைவரும் கொதித்துப் போய் கமெண்ட்டுகளைப் போட்டுள்ளனர். நேயர்களிடமிருந்து பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே நிகழ்ச்சியிலிருந்து போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். அப்படியிருக்க மீண்டும் அவர்களிடம், யார் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ள தகுதியானவர்கள் என்று எந்த வாக்கெடுப்பும் நடத்தாமல் அவர்களாகவே மீண்டும் ஆர்த்தியையும், ஜுலியையும் நிகழ்ச்சியில் திரும்பப் பங்கு பெற வைத்தது தவறு என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

அது மட்டுமல்லாமல் விஜய் டிவியின் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் புகழ் பெற்ற ஓவியாவிடமிருந்து ஒரு வீடியோ பதிவைக் கூடப் பெற முடியாமல், அவர் யு டியூபில் வெளியிட்ட வீடியோவை ஒளிபரப்பியதை பல நேயர்களும் கிண்டலடித்துளளார்கள். ஓவியா இனி பிக் பாஸ் வீட்டிற்குள் வர வாய்ப்பேயில்லை என்று தெரிந்ததும், நேயர்கள் பலரும் வருத்தமடைந்துள்ளனர்.

அதை அதிகமாக்கும் வகையில் ஜுலி, ஆர்த்தி மீண்டும் நுழைந்துள்ளதும் அவர்களை வெறுப்படைய வைத்துள்ளது. 'பிக் பாஸ்' விதிகளை அவர்கள் விருப்பப்படி அடிக்கடி மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். கேட்டால் சர்வதேச டிவி ஷோ என பில்ட்-அப் வேறு கொடுக்கிறார்கள்.

அட போங்கய்யா....

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top