'விஐபி 2' வில் 'பிக் பாஸ்' ரைஸா வில்சன்

\'விஐபி 2\' வில் \'பிக் பாஸ்\' ரைஸா வில்சன்

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிவரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 15 பேர்களில் ஒருவர், ரைஸா வில்சன். மாடல் அழகியான இவர், 'ஃபெமினா மிஸ் சவுத் பியூட்டிஃபுல் ஸ்மைல்' பட்டம் வென்றவர். வெற்றிகரமாக இரண்டு வாரங்களைக் கடந்துள்ள ரைஸா பற்றி, ஆச்சரியத் தகவல் கிடைத்துள்ளது.

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள 'விஐபி 2' படத்தில் ரைஸா நடித்திருக்கிறார் என்பதுதான் அந்த ஆச்சரியத் தகவல். தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி, விவேக் நடித்துள்ள இந்தப் படத்தில், கஜோலின் பர்சனல் செகரட்டரியாக நடித்துள்ளார் ரைஸா. 'பிக் பாஸ்' முடிந்தபிறகு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க 'விஐபி 2' டிரெய்லரையும் பாருங்க, ரைஸாவைக் கண்டுபிடிச்சிடலாம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top