பரத் நடிக்கும் “கடைசி பெஞ்ச் கார்த்தி“!

பரத் நடிக்கும் “கடைசி பெஞ்ச் கார்த்தி“!

இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் வலுவான வர்த்தகங்களைக் கொண்டிருக்கும் சுதிர் புதோடா தனது ராமா ரீல்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிக்கும் படம் “கடைசி பெஞ்ச் கார்த்தி“. இந்த படத்தில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பஞ்சாப்பில் மியூசிக்கல் ஆல்பங்களின் டாப் ஸ்டாரும் பிரபல மாடலுமான ருஹானி ஷர்மா மற்றும் அங்கனா ராய் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  மற்றும் ரவிமரியா, ஞானசம்பந்தன், சனா, சுரேகா, வாணி, இயக்குனர் காசி, மூனார் டேவிட், மதுரை வினோத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு    -  முஜிர் மாலிக்

இசை    -  அன்பு ராஜேஷ்

பாடல்கள்   -   கலைக்குமார், அண்ணாமலை, ஏக்நாத், இரா.ரவிஷங்கர்

எடிட்டிங்   -  என்.ஹெச் பாபு

ஸ்டண்ட்   -  ட்ராகன் பிரகாஷ்

நடனம்   -  ரமணா, திலீப்

நிர்வாகத் தயாரிப்பு    -  கிரண் தனமலா

தயாரிப்பு மேற்பார்வை   -   நயீம்

தயாரிப்பு   -  சுதிர் புதோடா

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  -  ரவி பார்கவன்.

இவர் தமிழில் வெல்டன், ஒரு காதல் செய்வீர்,  திரு ரங்கா ஆகிய படங்களையும், தெலுங்கில் இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ரவி பார்கவனிடம் கேட்டோம்.

இளமையான காதல் கதைதான் இந்தப் படம். அழகு தமிழில் காதல் என்ற வார்த்தையை உச்சரிக்கப் பட்ட போது காதல் மீது மரியாதையும், கௌரவமும் இருந்தது. அந்நிய மொழியான ஆங்கிலத்தில் லவ் என்று உச்சரித்த போது மரியாதையும், கௌரவமும் காணாமல் போய் காதல் மரியாதையை இழந்து விட்டது. அசிங்கப்படுத்தப்பட்டு விட்டது. இதை தான் கடைசி பெஞ்ச் கார்த்தி படத்தில் பதிவு செய்துள்ளேன்.பரத் கல்லூரி மாணவராக இதில் பொருந்திப் போய் இருக்கிறார். இளமையான படம் என்று சொல்கிற மாதிரி படம் இருக்கும் என்றார் இயக்குனர்.

படத்திற்கு சென்சார் “A“ சர்டிபிகேட் கொடுத்தது பற்றி கேட்டபோது..  படத்தின் கதை அப்படி தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிற இளைய தலைமுறை ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். பக்கா கர்ஷியல் காலேஜ் படமாக “ கடைசி பெஞ்ச் கார்த்தி “  இருக்கும் . படம் மார்ச் மாதம் வெளியாகிறது என்றார் ரவிபார்கவன்.

Tags: News, Hero, Art and Culture, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top