பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு முன் அமோக வசூலை குவித்துள்ளது!

பீஸ்ட் திரைப்படம் ரிலீஸுக்கு முன் அமோக வசூலை குவித்துள்ளது!

நடிகர் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் அமெரிக்க திரையரங்கும் ரிலீஸ் உரிமத்தை வலிமை போன்ற பல படங்களின் அமெரிக்க வினியோகஸ்தர்களான ஹம்சினி எண்டர்டெயின்மெண்ட் & அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் கைப்பற்றி உள்ளது. 
 
அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பீஸ்ட் படத்தின் டிரைலர் 'வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட அந்த டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
தற்போது பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் துவங்கி உள்ள நிலையில் அமெரிக்காவில் ஒரு நாள் முன்பு ஏப்ரல் 12 மாலை 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி ஏப்ரல்13 அதிகாலை 5 மணி அளவில்) முதல் காட்சி திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் விலையாக 20 அமெரிக்க டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்திய மதிப்பில் 1510 ரூபாய் ஆகும். மேலும் இப்படம் அமெரிக்காவில் டிக்கெட் முன் விற்பனையில் 350,000 டாலர்களை கடந்துள்ளது. இந்திய மதிப்பில் 2,65,74,138.05 கோடி ரூபாய் ஆகும். ரிலீஸுக்கு முன்னரே பீஸ்ட் படம் வசூலை அளிக்குவித்ததை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Tags: News

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top