பண்டாரத்தி..'யை 'கண்டா வரச்சொல்லுங்க..'

பண்டாரத்தி..\'யை \'கண்டா வரச்சொல்லுங்க..\'

சந்தோஷ் நாராயணன் இசையில், தனுஷின் நடிப்பில், 'கர்ணன்' படத்தில் இடம் பெற்றிருக்கும் 'பண்டாரத்தி..' எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும் வெளியாகி, சாதனை படைத்து வருகிறது.

பரியேறும் பெருமாள் என்ற படைப்பை வழங்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்த மண் மணம் சார்ந்த படைப்பாளி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாராகி ஏப்ரல் 9ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் புதிய திரைப்படம் கர்ணன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக தமிழ் திரை உலக டிஜிட்டல் நடிகர் திலகம் தனுஷ் நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜீஷா விஜயன் நடிக்கிறார். இவர்களுடன் சண்டக்கோழி பட புகழ் நடிகர் லால் யோகி பாபு 96 மற்றும் மாஸ்டர் பட புகழ் நடிகை கௌரி கிஷன் நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தில் இடம்பெற்ற கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியானது. பாடலின் மெட்டு குறித்து பல்வேறு கலவையான விமர்சனங்கள் இணையத்தில் எழுந்தாலும் இந்தப் பாடல் 12 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் படத்தில் இடம் பெற்ற இரண்டாவது பாடலும் வெளியாகியிருக்கிறது. பாடலாசிரியர் யுகபாரதி எழுதிய ' பண்டாரத்தி..' என தொடங்கும் அந்த பாடலை தேனிசைத் தென்றல் தேவா பாடியிருக்கிறார். நாட்டுப்புறப்பாட்டு வடிவில் வெளியான இரண்டாவது பாடலும் ரசிகர்களின் பேரன்பினால் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது.
 
இணையவாசிகள் தற்போது 'பண்டாரத்தி..'யை 'கண்டா வரச்சொல்லுங்க..' என இரண்டு பாடலுக்கும் தங்களின் ஆதரவை தெரிவித்து, அடுத்த பாடலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

 

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top