பிரம்மாண்டத்தின் புகலிடமாய் பாகுபலி 2!

பிரம்மாண்டத்தின் புகலிடமாய் பாகுபலி 2!

இந்திய சினிமா வரலாற்றில் எந்தவொரு திரைப்படமும் படைத்திராத பல சாதனைகளை படைத்து வருகிறது பாகுபலி -2. இதுவரை இப்படத்தை குறித்து எந்தவொரு எதிர்மறை கருத்தும் வராது அளவிற்கு இந்த படைப்பை செதுக்கியிருக்கிறார் ராஜமௌலி. வெளியாகிய ஒரே வாரத்தில் 750 கோடி வரை வசூல் செய்து இமாலய சாதனையை உருவாக்கியுள்ளது பாகுபலி. இந்தி சினிமா  கூட இந்தளவு வசூலை ஈட்டியதில்லை.

மக்கள் அனைவரையும் பிரம்மாண்டத்தின் பிடியில் கட்டிப்போடும் அளவுக்கு பாகுபலி-2-ன் விஸுவல் எபக்ட்ஸ் சிறப்பாக அமைந்துள்ளது. நம் முன்னோர்களின் வாழ்வையும் சரித்திர படைப்பை பார்க்க வேண்டும் என்கின்ற ஆர்வம் ஒருபுறம் இருக்க, மக்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது "கட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்?" என்ற கேள்வியே.

ராஜமௌலி இந்த கேள்விக்கு பதில் அளித்ததோடு மட்டுமல்லாமல் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை மக்கள் ஆர்வமாக எதிர்பார்க்கும் அளவிற்கு கதையம்சத்தை அமைத்துள்ளார். கதையின் கரு என்னவாக இருந்தாலும் அதனை திரையில் வெளிப்படுத்தும் விதமும்  தனி கலைதான். அந்த கலையை வைத்துத்தான் ராஜமௌலி நம்மை படத்தினோடு கட்டிப்போட்டுவிட்டார். கதைக்கு ஏற்றவாறு கதாப்பாத்திரங்களை தேர்வு செய்வதிலும் ராஜமௌலி சிறந்து விளங்கிவிட்டார். பாகுபலியின் எந்தவொரு கதாப்பாத்திரத்தையும் வேறொருவரால் ஈடு செய்ய முடியாத அளவிற்கு அனைத்து கதாப்பாத்திரமும் கச்சிதமாக பொருந்தியது படத்திற்கு மேலும் ஒரு பலமாக அமைந்துள்ளது.

கற்பனை காட்சியாக இருந்தாலும் அதனை அனைவரும் ரசிக்கும் படியாக அமைத்துள்ளனர். சினிமோட்டோகிராஃபி, ஸ்கிரீன் பிளே, எடிட்டிங் என அனைத்தும் மிக கச்சிதமாக அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகள் முதல் பாகத்தை போன்றுள்ளது என்று கூறிவிட முடியாத அளவு மிகவும் ஆச்சர்யத்தில் நம்மை ஆழ்த்தியுள்ளது.

இதுபோன்ற பல பிரம்மாண்டத்தை தன்னுள் கொண்ட பாகுபலி 2  மொத்தத்தில் அடுத்த பாகம் வராத என்கின்ற அளவிற்கு ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என்றே சொல்லலாம்.

Tags: News, Hero, Star

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top