திரைப்படமாக தயாராகும் தமிழக தடகள வீராங்கனையின் சுயசரிதை

திரைப்படமாக தயாராகும் தமிழக தடகள வீராங்கனையின் சுயசரிதை

தமிழகத்தை சேர்ந்த தடகள வீராங்கனை சாந்தி சவுந்தரராஜன் அவர்களது வாழ்க்கை வரலாறு அவரது பெயரிலேயே திரைப்படமாக தயாராகிறது.
 
அறிமுக இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி இயக்கத்தில் தயாராக இருக்கும் முதல் திரைப்படம் 'சாந்தி சௌந்தரராஜன்'.  2006 ஆம் ஆண்டில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகள பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் தமிழக வீராங்கனையான சாந்தி சௌந்தரராஜன். பாலின உறுதிப்படுத்துதலில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பதக்கத்தை திருப்பி அளிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் மனவருத்தம் அடைந்த அவர் விளையாட்டுப் போட்டியிலிருந்து விலகினார். சுவாரசியமும் விறுவிறுப்பும் நிறைந்த இவரது வாழ்க்கை, அவரது ஒப்புதலுடன் விரைவில் திரைப்படமாக உருவாகிறது. இதனை கோபிநாத் D.தேவ் ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசை அமைக்கிறார்.
 
இதுதொடர்பாக படத்தின் இயக்குனர் ஜெயசீலன் தவப்புதல்வி பேசுகையில், 'சாந்தி போன்ற தடகள வீராங்கனைகள் எதிர்கால சமுதாயத்திற்கு நம்பிக்கை நட்சத்திரம். அவர்களின் வாழ்வில் மறைக்கப்பட்ட பகுதிகளையும், சொல்லப்படாத பகுதிகளையும் அவரது ஒப்புதலுடன் திரைக்கதையாக்கி இருக்கிறோம். சாந்தி கதாபாத்திரத்தில் நடிக்க மூன்று நடிகைகள் பரிசீலனையில் இருக்கிறார்கள். யார் தெரிவு செய்யப்படுவார்கள் என்பதை ஏப்ரல் 14ஆம் தேதியன்று அறிவிக்கப்படும்.' என்றார்.
 
தமிழ் திரை உலகில் ஏராளமான சுயசரிதைகள் திரைப்படம் தயாராகிவருகிறது. ஏற்கனவே விளையாட்டு தொடர்பான வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் இந்திய அளவில் வெளியாகி வெற்றி பெற்றது..tb_button {padding:1px;cursor:pointer;border-right: 1px solid #8b8b8b;border-left: 1px solid #FFF;border-bottom: 1px solid #fff;}.tb_button.hover {borer:2px outset #def; background-color: #f8f8f8 !important;}.ws_toolbar {z-index:100000} .ws_toolbar .ws_tb_btn {cursor:pointer;border:1px solid #555;padding:3px} .tb_highlight{background-color:yellow} .tb_hide {visibility:hidden} .ws_toolbar img {padding:2px;margin:0px}

எங்களைப்பற்றி

மதுரையில் உள்ள தமிழ் வாசகர்கள் செய்திகளை உடனடியாகவும் எளிதாகவும் படிக்கும் வகையில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன்...
More

தொடர்பு கொள்ள

Madurai Address:
Plot No. 22, Sri Meenakshi Garden, Visalakshipuram Main Road, Reserve Line, Madurai-14, Tamilnadu, India.

Back to Top